தமிழ் வினை யின் அர்த்தம்

வினை

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு செயல்; தொழில்.

 • 2

  தீங்கை அல்லது பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் செயல்.

  ‘நீ இப்போது ஊருக்கு ஏன் போக வேண்டும் என்று கேட்டதுதான் வினை, சண்டை ஆரம்பித்துவிட்டது’
  ‘விளையாட்டு வினையாகிவிடப்போகிறது’

 • 3

  (இந்து மதத்தில்) இந்தப் பிறவியில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் செய்த செயல்; கருமம்.

  ‘முற்பிறவியின் வினை இன்னும் எங்கள் குடும்பத்தை ஆட்டிவைக்கிறது’
  ‘நல்வினை’
  ‘தீவினை’

 • 4

  இலக்கணம்
  வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டுவதுமான சொல் வகை.

 • 5

  வேதியியல்
  மாற்றம் ஏற்படும் வகையில் ஒரு வேதிப்பொருளுக்கும் மற்றொரு வேதிப்பொருளுக்கும் இடையில் நடைபெறும் செயல்.

  ‘சில வினைகளில் வெப்பநிலையை அதிகரிக்கும்போது வினையின் வேகமும் அதிகரிக்கிறது’
  ‘சிறு மூலக்கூறுகள் ஒன்றுகூடி அதிக எடையுடைய மிகப் பெரிய மூலக்கூறை உண்டாக்கும் வினைக்கு ‘பல்படியாக்கல்’ என்று பெயர்’