தமிழ் விம்மு யின் அர்த்தம்

விம்மு

வினைச்சொல்விம்ம, விம்மி

 • 1

  தொடர்ந்து அழும்போது மூச்சுத் தடைப்படுவதால், நெஞ்சு புடைக்க, மெல்லிய ஒலி வெளிப்படுதல்; தேம்புதல்.

  ‘இழவு வீட்டில் துண்டால் வாயைப் பொத்தி விம்மி அழுதபடி நின்றிருந்தார்’

 • 2

  (நரம்பு, மார்பு முதலியவை) புடைத்து மேலெழுதல்.

  ‘கழுத்து நரம்புகள் விம்மித் தெரிந்தன’
  ‘பெருமிதத்தில் நெஞ்சு விம்மிற்று’