தமிழ் வியங்கோள் யின் அர்த்தம்

வியங்கோள்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒருவரை வாழ்த்துவது, ஒருவரிடம் ஒன்றை வேண்டிக்கொள்வது, ஒருவரை ஒன்றைச் செய்யுமாறு விதிப்பது முதலிய நிலைகளுக்குப் பயன்படுத்தும் (எழுவாய்க்குத் தகுந்தபடி மாற்றம் பெறாத) வினைமுற்று வகை.

    ‘‘குடியரசுத் தலைவர் அவர்களே வருக! வருக!’ என்பதில் ‘வருக’ என்பது ‘வா’ என்னும் வினையின் வியங்கோள் வடிவம்’