தமிழ் வியப்பு யின் அர்த்தம்

வியப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

  ‘நடிகர் ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை’
  ‘அந்தக் காலத்தில் இப்படி ஒரு அணையைக் கட்டியது வியப்பான விஷயம் இல்லையா?’
  ‘இன்றும் நம் நாட்டில் உள்ள கோயில்களைக் கண்டு வெளிநாட்டவர் வியப்படைகின்றனர்’
  ‘இதைவிட வியப்புக்குரிய சம்பவம் போன ஆண்டு நடந்தது’
  ‘வியப்பு ஏற்படுத்தும் அளவுக்கு மிகப் பெரிய போர்க்கப்பல்’