தமிழ் விரட்டு யின் அர்த்தம்

விரட்டு

வினைச்சொல்விரட்ட, விரட்டி

 • 1

  (ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்திலிருந்து) போகச் செய்தல்; துரத்துதல்.

  ‘கொசுவை விரட்ட என்ன வழி?’
  ‘வயலில் மேய்ந்துகொண்டிருந்த மாட்டை விரட்டினான்’
  ‘விபத்து நடத்த இடத்தில் கூடிய பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர்’
  உரு வழக்கு ‘நாட்டிலிருந்து வறுமையை விரட்டப் பாடுபடுவோம்’

 • 2

  (ஒரு நாடு, அமைப்பு முதலியவற்றிலிருந்து ஒருவரை முற்றிலுமாக) வெளியேற்றுதல்.

  ‘தலைமையை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக என்னைக் கட்சியிலிருந்து விரட்டிவிட்டார்கள்’
  ‘முன்னாள் அதிபர் நாட்டை விட்டு விரட்டப்பட்டார்’

 • 3

  (மடக்கிப் பிடிக்கும் முறையில்) துரத்துதல்.

  ‘கடத்தல்காரர்களைக் காவல் படையினர் விரட்டிச்சென்று மடக்கினார்கள்’
  ‘திருடனை ஊர்மக்கள் விரட்டிப் பிடித்தனர்’
  ‘புலி காட்டெருமையை விரட்டிக்கொண்டு சென்றது’

 • 4

  (ஒன்றைச் செய்யுமாறு ஒருவரை) துரிதப்படுத்துதல்.

  ‘தம்பியைக் கடைக்குப் போய்வரும்படி விரட்டினாள்’
  ‘மேலதிகாரி எங்களை விரட்டிவிரட்டி வேலை வாங்குவார்’