தமிழ் விரயம் யின் அர்த்தம்

விரயம்

பெயர்ச்சொல்

 • 1

  பயனற்ற முறையில் செலவிடப்படுவதால் அல்லது சரியான முறையில் பயன்படுத்தாததால் ஒன்று வீணாகும் நிலை.

  ‘இது மக்களின் வரிப் பணத்தை விரயமாக்கும் திட்டம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது’
  ‘அவனுக்கு உதவப்போய்ப் பண விரயமும் கால விரயமும்தான் ஏற்பட்டது’
  ‘மழை நீர் விரயமாவதைத் தடுப்போம்’
  ‘பேசிப்பேசிச் சக்தியை விரயம் செய்யாதீர்கள்’