தமிழ் விரிசல் யின் அர்த்தம்

விரிசல்

பெயர்ச்சொல்

 • 1

  (சுவர், பலகை, பாத்திரம் போன்றவற்றின் பரப்பில் கோடுபோல் ஏற்படும்) சிறு பிளவு.

  ‘அடித்தளம் சரி இல்லாவிட்டால் சுவரில் விரிசல்கள் ஏற்படலாம்’
  ‘விரிசல் விழுந்த அண்டாவைக் கடையில் போட்டுவிட்டு வேறு புதிதாக வாங்க வேண்டும்’

 • 2

  (உறவு அல்லது ஒற்றுமை) குலைவுற்ற நிலை.

  ‘கணவன் மனைவி உறவில் விரிசல்’
  ‘தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் விரிசல்கள் தோன்றியுள்ளன’