தமிழ் விரிவு யின் அர்த்தம்

விரிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தன்மை, எண்ணிக்கை போன்றவற்றில்) அதிக அளவிலானது.

  ‘பிரதமரின் வருகையை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’
  ‘நாளடைவில் இயக்கம் விரிவாக வளரத் தொடங்கியது’

 • 2

  (பேச்சு, எழுத்து, ஆய்வு போன்றவற்றைக் குறித்து வரும்போது) நிறைவான, தீவிரமான அல்லது ஆழமான தன்மை.

  ‘தன்னுடைய பயண நிகழ்ச்சிகளை விரிவாகச் சொன்னான்’
  ‘தமிழ்ப் பண்கள் பற்றிய ஆய்வு விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது’
  ‘கடல் ஆமையைப் பற்றிய விரிவான செய்திகளை இந்த நூலில் காணலாம்’
  ‘குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தன’
  ‘கட்டுரை விரிவாக இல்லை’
  ‘பங்குச் சந்தையைப் பற்றி இந்த நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளது’
  ‘இந்தக் கதையை விரிவாகவும் சொல்லலாம்’

 • 3

  சிறியதாக இருக்கும் நிலையிலிருந்து ஒன்று நீளும் அல்லது பெரியதாக ஆக்கப்படும் நிலை.

  ‘உலோகங்கள் வெப்பத்தால் விரிவடையும்’
  ‘‘கி.மு’ என்பதன் விரிவு ‘கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால்’ என்பது ஆகும்’