தமிழ் விருது யின் அர்த்தம்

விருது

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரின் அல்லது ஒரு நிறுவனம், தொழிற்சாலை போன்றவற்றின் சாதனை, திறமை, சேவை முதலியவற்றை) பாராட்டிக் கௌரவிக்கும் விதத்தில் (பெரும்பாலும் பணத்துடன்) வழங்கப்படும் சான்றிதழ் அல்லது பட்டம்.

  ‘எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்றவர்’
  ‘சிறப்பான சமூக சேவை செய்ததற்காக அவர் ஜனாதிபதி விருது பெற்றார்’
  ‘தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன’
  ‘தாதா சாகிப் பால்கே விருது பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் ஆவார்’
  ‘தரக்கட்டுப்பாட்டு நெறிகளைச் சிறப்பாகப் பின்பற்றிவருவதற்காக இந்தத் தொழிற்சாலைக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது’
  ‘சென்னையில் உள்ள பாரதீய வித்யா பவனுக்கு மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டது’
  ‘இன்று நடந்த ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்’