தமிழ் விருந்து யின் அர்த்தம்

விருந்து

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரை அல்லது பலரை அழைத்து மரியாதை செய்வதற்காகவோ ஒன்றைக் கொண்டாடும் விதத்திலோ) உபசரித்து சிறப்பான உணவு வழங்குதல்/மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் வழங்கப்படும் உணவு.

  ‘நண்பருக்குப் பிறந்த நாள் என்பதால் விருந்துக்கு எங்களை அழைத்திருந்தார்’
  ‘பதவி உயர்வு கிடைத்தால் விருந்து வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்’
  ‘கல்யாண விருந்து எப்படி இருந்தது?’
  ‘அரசாங்க விருந்தில் கலந்துகொள்ள முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டது’
  ‘தன் மகன் வெளிநாடு செல்வதை ஒட்டி உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து விருந்து வைத்தார்’
  ‘உன் பிறந்த நாளுக்கு விருந்து கொடுப்பாயா?’
  ‘கப்பலின் மேல்தளத்தில் விருந்து நடந்துகொண்டிருந்தது’

 • 2

  புலன்களை மகிழ்விக்கும் வகையில் அமைவது.

  ‘மெல்லிசை விருந்து’
  ‘நகைச்சுவை விருந்து’
  ‘கண்களுக்கு விருந்தாக அமைந்த இயற்கைக் காட்சிகள்’
  ‘கலை விருந்து’
  ‘இலக்கிய விருந்து’