தமிழ் விரும்பு யின் அர்த்தம்

விரும்பு

வினைச்சொல்விரும்ப, விரும்பி

 • 1

  ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்தது என்று கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ எண்ணம் கொள்ளுதல்; ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று நாட்டம் கொள்ளுதல்.

  ‘குடும்பப் பாங்கான படத்தைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்’
  ‘உங்களோடு கொஞ்சம் தனியாகப் பேச விரும்புகிறேன்’
  ‘இது அவனே விரும்பி ஏற்றுக்கொண்ட வேலை’
  ‘யாரும் தன்னைக் கேள்விக் கேட்பதை அவர் விரும்பவில்லை’
  ‘என் மகள் இனிப்புகளை அதிகம் விரும்பி உண்பாள்’
  ‘தன் மகன் ஆசிரியர் ஆவதையே அவர் பெரிதும் விரும்பினார்’
  ‘இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?’

 • 2

  காதலித்தல்; நேசித்தல்.

  ‘அவள் உன்னை விரும்புகிறாளா என்பதை முதலில் தெரிந்துகொள்’