தமிழ் விரோதம் யின் அர்த்தம்

விரோதம்

பெயர்ச்சொல்

 • 1

  பகை; பகைமை.

  ‘இது விரோதம் காரணமாக நடந்த கொலை என்று ஊரில் பேசிக்கொள்கிறார்கள்’
  ‘நீ பக்கத்து வீட்டுக்காரனோடு விரோதம் வைத்துக்கொள்ளாதே’
  ‘இந்த ஊரில் யார்மீதும் எனக்கு விரோதம் கிடையாது’
  ‘விரோத மனப்பான்மையை மாற்றிக்கொள்ள நாம் பழக வேண்டும்’

 • 2

  (குறிப்பிடப்படுவதற்கு) புறம்பானதாகவோ எதிரானதாகவோ இருப்பதால் பாதிப்பு, தீங்கு, சேதம் போன்றவற்றை விளைவிப்பது.

  ‘தேச விரோதச் செயல்கள்’
  ‘கட்சிக்கு விரோதமாகக் காரியங்கள் செய்ததால் அவரை விலக்கிவிட்டனர்’
  ‘என் இஷ்டத்துக்கு விரோதமாக அவன் நடந்துகொண்டான்’
  ‘சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’
  ‘ஜனநாயக விரோதச் சக்திகள்’
  ‘ஒரு காலத்தில் இந்துக்கள் கடல் கடந்து செல்வதைச் சமய விரோதச் செயல் என்று கருதினர்’
  ‘காட்டில் மரம் வெட்டுதல் ஒரு சட்ட விரோதமான காரியம் ஆகும்’

 • 3

  குறிப்பிட்ட ஒன்றுக்கு முரண்படும் விதம்.

  ‘வழக்கத்துக்கு விரோதமாக அவர் சீக்கிரம் அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்’
  ‘குணத்தில் என் தம்பி எனக்கு நேர் விரோதம்’
  ‘அவன் பேசியதற்கு விரோதமாக நடக்க மாட்டான்’