தமிழ் விரோதி யின் அர்த்தம்

விரோதி

வினைச்சொல்விரோதிக்க, விரோதித்து

 • 1

  பகைத்துக்கொள்ளுதல்.

  ‘இது மேலதிகாரியை விரோதித்துக்கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை’
  ‘உனக்காக அவரை விரோதித்துக்கொள்ள நான் தயாராக இல்லை’
  ‘எல்லோரையும் விரோதித்துக்கொண்டு ஊரில் எப்படி வாழ முடியும்’
  ‘தொழிலாளர்களை விரோதித்துக்கொள்ள எந்தக் கட்சியும் விரும்பாது’

தமிழ் விரோதி யின் அர்த்தம்

விரோதி

பெயர்ச்சொல்

 • 1

  பகைவன்; எதிரி.

  ‘உனக்கு விரோதி என்றால் அவன் எனக்கும் விரோதிதான்’
  ‘பரம விரோதிகள்கூட அவருடைய துணிச்சலைக் கண்டு வியந்தார்கள்’
  ‘தொழில்முறையில் உங்களுக்கு யாராவது விரோதிகள் உண்டா?’
  ‘உலகமயமாக்கலுக்கு நான் விரோதி அல்ல’

 • 2

  (ஒரு நாடு, சமூகம் முதலியவற்றின் நலனுக்கு) எதிராக அல்லது புறம்பாகச் செயல்படுபவர்.

  ‘தேச விரோதி’
  ‘சமூக விரோதி’