விரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விரை1விரை2

விரை1

வினைச்சொல்விரைய, விரைந்து

 • 1

  (ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு) வேகமாகப் போதல்.

  ‘கலவரம் நடந்த இடத்திற்குக் காவலர்கள் விரைந்தனர்’
  ‘ரயில் விரைந்துகொண்டிருந்தது’
  ‘விரைந்து ஓடும் ஆற்றல் புலிக்கு உண்டு’
  ‘தன் வேலைகளை முடித்துவிட்டு விரைந்து வந்து அவர்களோடு சேர்ந்துகொள்வதாகக் கூறினான்’
  ‘வில்லிலிருந்து விடுபடும் அம்பு நேர்கோட்டில் விரைந்து செல்கிறது’
  ‘காலையில் தாமதமாகக் கண் விழித்ததால் அலுவலகத்துக்கு விரைந்தார்’

விரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விரை1விரை2

விரை2

பெயர்ச்சொல்

 • 1

  விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.

 • 2

  பேச்சு வழக்கு (தாவரங்களின்) விதை.

 • 3

  (மென்மை இழந்த) விறைத்த தன்மை.

  ‘சாதம் ஏன் இப்படி விரையாக இருக்கிறது?’