தமிழ் விறுவிறுப்பு யின் அர்த்தம்

விறுவிறுப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (கதை, திரைப்படம் போன்றவை) ரசிப்பவரை, பார்ப்பவரை ஈர்க்கும் விதத்தில் தொய்வில்லாமல் சுவாரசியத்துடன் இருக்கும் தன்மை.

  ‘விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்’
  ‘துவக்கத்திலிருந்தே கதை மிக விறுவிறுப்பாகச் சென்றது’

 • 2

  வேகமும் சுறுசுறுப்பும் நிறைந்த தன்மை.

  ‘பிற்பகலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது’

 • 3

  குத்தும் உணர்வு; அரிப்பு.

  ‘கருணைக்கிழங்கு சாப்பிட்டதால் நாக்கில் ஒரு விறுவிறுப்பு’