தமிழ் விறை யின் அர்த்தம்

விறை

வினைச்சொல்விறைக்க, விறைத்து

 • 1

  (குளிர் முதலியவற்றால் உடல், கை, கால் முதலியவை) வளைக்க அல்லது அசைக்க முடியாதபடி இறுக்கமாகவும் உணர்வற்றும் போதல்; மரத்தல்.

  ‘குளிர்ந்த நீரில் பாத்திரம் கழுவியதால் கை விறைத்துப்போயிற்று’
  ‘அசையாமல் ஒரே இடத்தில் வெகு நேரம் உட்கார்ந்திருந்ததால் கால்கள் மரத்து விறைத்தது’

 • 2

  (உயிர் பிரிந்த பிறகு உடல்) இறுக்கமாகவும் அசைவற்றும் போதல்.

  ‘பாலத்துக்கு அடியில் ஒரு பிணம் விறைத்துக்கிடந்தது’

 • 3

  (உணவுப் பொருட்கள் நீர்த் தன்மையை இழப்பதால்) காய்ந்து கடினமானதாக ஆதல்.

  ‘சாதம் விறைத்துப்போய்விட்டது’
  ‘காலையில் மிச்சம் வைத்துவிட்டுப் போன இட்லி சாயங்காலம் விறைத்துக்கிடந்தது’