தமிழ் விறைப்பு யின் அர்த்தம்

விறைப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (குளிர் போன்றவற்றால் கை, கால்கள் அல்லது தசை) விறைத்துப்போதல்.

 • 2

  (கை, கால்கள், முகம் போன்றவை குறித்து வரும்போது) இறுக்கமாகவும் நேராகவும் வைத்துக்கொள்ளும் அல்லது இறுக்கமாகவும் நேராகவும் இருக்கும் நிலை.

  ‘விறைப்பாக எழுந்து நின்று கூர்க்கா வணக்கம் தெரிவித்தார்’
  ‘கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் அவன் விறைப்பாக நின்றுகொண்டிருந்தான்’
  ‘முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு அவள் என்னைப் பார்த்தாள்’

 • 3

  (ஒருவருடைய பேச்சு அல்லது செயல் போன்றவற்றைக் குறித்து வரும்போது) இயல்பாகவும் சுமுகமாகவும் இல்லாத நிலை.

  ‘நான் கேட்டதற்கு அவர் விறைப்பாகப் பதில் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை’