தமிழ் வில்லங்கம் யின் அர்த்தம்

வில்லங்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (வீடு, நிலம் முதலியவற்றை விற்கத் தடையாக இருக்கும்) சொத்துகளின் பேரில் கடன் வாங்கியிருத்தல் போன்ற குறை.

  ‘அந்த மனையைப் பொறுத்த மட்டில் வில்லங்கம் எதுவும் இல்லை, தாராளமாக வாங்கலாம்’

 • 2

  உள்நோக்கத்தோடு பிரச்சினை அல்லது வம்பு உண்டாக்க வேண்டும் என்கிற தன்மை.

  ‘ஆரம்பத்திலிருந்தே அவர் வில்லங்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்’
  ‘அவன் வில்லங்கமான ஆள், அவனிடம் பார்த்துப் பழகு’

 • 3

  அருகிவரும் வழக்கு பிரச்சினை; விவகாரம்.

  ‘எல்லாம் ஒழுங்காக நடந்துகொண்டிருக்கிறது, நீ புதிதாக எந்த வில்லங்கத்தையும் ஏற்படுத்திவிடாதே!’