தமிழ் வில்லை யின் அர்த்தம்

வில்லை

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு என்று உலோகம், கண்ணாடி முதலியவற்றால்) வட்டம், சதுரம் போன்ற வடிவத்தில் தட்டையானதாகத் தயாரிக்கப்பட்டது.

  ‘சிறு கண்ணாடி வில்லைகள் ஒட்டப்பட்டுப் புது மாதிரியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள்’
  ‘வாக்குச் சாவடி முகவர்கள் அடையாள வில்லையைக் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்’
  ‘சோப்புவில்லை’

 • 2

  (பழம், காய்கறி போன்றவற்றை) வட்டம், சதுரம் போன்ற வடிவங்களில் நறுக்கிய துண்டு.

  ‘வெள்ளரிக்காயை வில்லைவில்லையாக வெட்டிக்கொள்ளவும்’
  ‘வாழைப்பழத்தைச் சம அளவில் வில்லையாக நறுக்கவும்’

 • 3

  (நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம் போன்றவற்றில் விற்கப்படும், ஆவணங்களில் ஒட்டப்பட வேண்டிய) குறிப்பிடப்பட்ட மதிப்பு அச்சிடப்பட்ட சிறிய செவ்வக வடிவத் தாள்.

  ‘மனு செய்யும் விண்ணப்பத்தில் ஐந்து ரூபாய்க்கான வில்லை ஒட்ட வேண்டும்’

 • 4

  வட்டார வழக்கு பிறை அல்லது வட்ட வடிவத்தில் குறிப்பிட்ட சில சுவைகளில் செய்யப்படும் மிட்டாய்.