தமிழ் விலைவாசி யின் அர்த்தம்

விலைவாசி

பெயர்ச்சொல்

  • 1

    (அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும்) பொருள்களின் விலைகள் அல்லது விலை நிலவரம்.

    ‘இப்படி விலைவாசி ஏறிக்கொண்டேபோனால் எப்படிக் குடித்தனம் நடத்த முடியும்?’
    ‘விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்’
    ‘விலைவாசிக்குத் தகுந்தாற்போல்தான் செலவு செய்ய வேண்டும்’