விளக்கம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விளக்கம்1விளக்கம்2

விளக்கம்1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பேச்சிலோ எழுத்திலோ) ஒன்றைத் தெளிவுபடுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு.

  ‘சித்தர் பாடலுக்கு அவர் தந்த விளக்கம் அவ்வளவு பொருத்தமாக இல்லை’
  ‘பிரச்சினைபற்றி விளக்கமாகச் சொன்னார்’
  ‘முகவரியை விளக்கமாக எழுது’
  ‘இந்திய நதிகளைப் பற்றி இனி விளக்கமாகக் காண்போம்’
  ‘இந்த அகராதியில் பொருள் விளக்கம் தெளிவாகத் தரப்பட்டுள்ளது’
  ‘ரயில் நிலையத்தில் விளக்கமான அட்டவணை தரப்பட்டிருந்தது’
  ‘இதுவரை சோழர்களைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம்’
  ‘நீண்ட விளக்கத்தைக் கோரி நிற்கும் கேள்வி இது’
  ‘இந்த நூலில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி ஒரு புதிய விளக்கம் தரப்பட்டுள்ளது’
  ‘தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்பற்றி தெளிவான விளக்கம் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை’
  ‘நீ சொல்வது புதிய விளக்கமாக உள்ளதே!’

 • 2

  ஒன்று நடந்ததற்கான காரணமாக ஒருவர் தெரிவிப்பது.

  ‘வேலைக்கு வராமலிருந்ததற்கு அவன் தரும் விளக்கங்கள் நம்பும்படியாக இல்லை’

விளக்கம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விளக்கம்1விளக்கம்2

விளக்கம்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு விசாரணை.

  ‘உன்மீது ஒரு விளக்கம் இருக்கிறது’