தமிழ் விளங்கு யின் அர்த்தம்

விளங்கு

வினைச்சொல்விளங்க, விளங்கி

 • 1

  சிறப்பானதாக அமைதல்; திகழ்தல்; பொலிதல்.

  ‘உன் வாழ்க்கையில் நீ எல்லா நலமும் பெற்று விளங்க வாழ்த்துகிறேன்’
  ‘கட்டடம் பார்ப்பவர்களைக் கவரும்படியான அமைப்புடன் அழகாக விளங்க வேண்டும்’
  ‘தன் மகன் இசையில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினார்’
  ‘சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்குச் சீரான பயிற்சி அவசியம்’
  ‘இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை சிறந்து விளங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன’
  ‘இந்த ஆலயம் பிரசித்தியுடன் விளங்குவதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்’
  ‘பல புராதனக் கலைகளுக்குத் தாயகமாகத் தமிழகம் சிறந்து விளங்கியது’

 • 2

  (குறிப்பிட்ட தன்மையைக் கொண்டு) அமைதல்.

  ‘தற்காலக் கவிதைக்கு முன்னோடியாக விளங்கியவை பாரதியின் கவிதைகள்’
  ‘முஸ்லிம்களின் புனித ஸ்தலமாக மெக்கா விளங்குகிறது’
  ‘கடலோரம் அமைந்துள்ள சவுக்கு மரக் காடுகள் சிறந்த பயனை அளிப்பனவாக விளங்குகின்றன’
  ‘அச்சுத் தொழிலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நகரம் சிவகாசி’

 • 3

  (பெரும்பாலும் எதிர்மறையில்) நல்லபடியாக வாழ்தல்; உருப்படுதல்.

  ‘‘நீ விளங்காமல் போவாய்’ என்று சாபமிட்டான்’
  ‘அவன் செய்கிற காரியம் எதுவும் விளங்காது என்பது தெரிந்த விஷயமாயிற்றே’

தமிழ் விளங்கு யின் அர்த்தம்

விளங்கு

வினைச்சொல்விளங்க, விளங்கி

 • 1

  (ஒருவருக்கு ஒரு செய்தி, விஷயம் முதலியவை) புரிதல்.

  ‘நீ சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை’
  ‘‘உங்களுக்கு விளங்குகிறதா?’ என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டே பாடம் நடத்தினார்’

தமிழ் விளங்கு யின் அர்த்தம்

விளங்கு

வினைச்சொல்விளங்க, விளங்கி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் எதிர்மறையில்) (கை, கால் முதலியவை) செயல்படுதல்.

  ‘விபத்தில் அடிபட்டதிலிருந்து அவனுக்குக்கால் விளங்கவில்லை’

தமிழ் விளங்கு யின் அர்த்தம்

விளங்கு

வினைச்சொல்விளங்க, விளங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு விசாரித்தல்; விசாரணை செய்தல்.

  ‘நீதிமன்றத்தில் அவரின் கொலை வழக்கு விளங்கப்படுகின்றது’
  ‘உங்களை விளங்க வேண்டும், இராணுவ முகாமுக்கு வாருங்கள்’