தமிழ் விளம்பரம் யின் அர்த்தம்

விளம்பரம்

பெயர்ச்சொல்

 • 1

  பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றில்) பொருள், சேவை, வசதி போன்றவை பற்றிய அறிவிப்பு.

  ‘விளம்பரத்தினால் மட்டுமே ஒரு திரைப்படம் ஓடிவிடாது’
  ‘வீடு வேண்டும் என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுங்கள்’
  ‘விற்பனையைப் பெருமளவில் ஊக்குவிக்க விளம்பரங்கள் உதவுகின்றன’
  ‘விளம்பரங்களை நம்பியே தொலைக்காட்சி உள்ளது’
  ‘வானொலி விளம்பரம் என்பது தொலைக்காட்சி விளம்பரத்திலிருந்து வேறுபட்டது’

 • 2

  கவனத்தைக் கவரும் வகையிலான ஒரு செயல், நிகழ்ச்சி போன்றவற்றின் மூலம் பரவலாக எல்லாராலும் ஒருவர் அல்லது ஒன்று அறியப்படும் நிலை; புகழ்.

  ‘நன்கொடை கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டார்’
  ‘தர்ம காரியம் என்பது விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது அல்ல’
  ‘எனது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் எனக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது’