தமிழ் விளாசு யின் அர்த்தம்

விளாசு

வினைச்சொல்விளாச, விளாசி

 • 1

  (பிரம்பு, சவுக்கு முதலியவற்றால்) பலமாகத் தொடர்ந்து அடித்தல்.

  ‘கோபத்தில் பையனைப் பிரம்பால் விளாசிவிட்டார்’

 • 2

  (கிரிக்கெட்டில்) பந்துவீச்சை எதிர்கொண்டு அதிரடியாக அடித்தல்/அப்படி அடிப்பதன் மூலம் நிறைய ஓட்டங்களைப் பெறுதல்.

  ‘துவக்க ஆட்டக்காரராக இறங்கிய கங்குலி பந்தை நாலா பக்கமும் விளாசினார்’
  ‘ஒரு நாள் போட்டிகளில் லாரா 19 சதங்களை விளாசியுள்ளார்’

 • 3

  (ஒரு செயலை) சிறப்பாகச் செய்தல்; (ஒரு சூழலை) திறமையாகக் கையாளுதல்.

  ‘அவர் இப்படி ஆங்கிலத்தில் விளாசித்தள்ளுவார் என்று நான் நினைக்கவேயில்லை’