தமிழ் விளிம்பு யின் அர்த்தம்

விளிம்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின்) பரப்பு முடியும் இடம்; ஓரம்.

  ‘கத்தியின் விளிம்பு வெயிலில் மின்னியது’
  ‘கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தான்’
  ‘நெட்டிலிங்க மரத்தின் இலை விளிம்பு ரம்பம்போல் இருக்கும்’
  ‘கூரையின் விளிம்பிலிருந்து ஐந்து அடி தள்ளி ஒரு வேப்ப மரம்’
  உரு வழக்கு ‘அவள் துன்பத்தின் விளிம்பிற்கே போய்விட்டாள்’

 • 2

  (கிணறு, பாத்திரம் முதலியவற்றின்) மேல்பகுதி.

  ‘கிணற்றுக்கட்டின் விளிம்பில் ஒரு காக்கை உட்கார்ந்திருந்தது’
  ‘குடத்தின் விளிம்புவரை தண்ணீர் இருந்தது’
  ‘நீரில் விழுந்தவன் படகின் விளிம்பைப் பிடித்தபடி மிதந்தான்’