விளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விளை1விளை2

விளை1

வினைச்சொல்விளைய, விளைந்து, விளைக்க, விளைத்து

 • 1

  (பயிர் போன்றவை) உற்பத்தியாதல்.

  ‘கரிசல் மண்ணில் பருத்தி நன்றாக விளையும்’
  ‘இந்த மாதிரி அரிய மூலிகைகளெல்லாம் காட்டில் தானாக விளைபவை’
  ‘இந்தியாவில் விளையும் வாசனைப் பொருள்களுக்கு வெளிநாட்டில் நிறைய கிராக்கி இருக்கிறது’
  ‘உணவு தானியங்கள் மிகுதியாக விளையும் வண்டல் பிரதேசம்’

 • 2

  (நல்ல நிலை அல்லது மோசமான விளைவு) ஏற்படுதல்; உண்டாதல்.

  ‘பிறருக்குத் தொல்லை விளையும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது’
  ‘இந்தப் பாசனத் திட்டத்தால் பொதுமக்களுக்குப் பயன் விளையும்’
  ‘மின்சாரம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது அதனால் இவ்வளவு நன்மை விளையும் என்று யாரும் கற்பனைகூட செய்துபார்க்கவில்லை’
  ‘கேடுகள் விளைந்துவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டும்’
  ‘நாம் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ளாததால் விளைந்த கேடு இது’
  ‘இருவருக்கிடையே விளைந்த பூசலின் காரணமாகக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது’

விளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விளை1விளை2

விளை2

வினைச்சொல்விளைய, விளைந்து, விளைக்க, விளைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு விளைவித்தல்.

  ‘பொதுச் சொத்துக்குத் தீங்கு விளைக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார்’