தமிழ் விளையாட்டுப் போல யின் அர்த்தம்

விளையாட்டுப் போல

வினையடை

 • 1

  எந்தவிதத் திட்டமும் குறிக்கோளும் இல்லாமல்.

  ‘விளையாட்டுப் போல பழைய நாணயங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். இன்று என்னிடம் இருக்கும் காசுகளின் மதிப்பு பல லட்சம் பெறும்’
  ‘விளையாட்டுப் போல நண்பர்கள் ஆரம்பித்த மன்றம், இன்று தமிழகம் முழுதும் பிரபலமாகிவிட்டது’

 • 2

  (காலத்தைக் குறித்து வரும்போது) கவனத்தில் நிற்காத அளவுக்கு மிக வேகமாக.

  ‘கல்யாணம் ஆகி விளையாட்டுப் போல ஒரு வருடம் ஓடிவிட்டது!’
  ‘நாங்கள் இந்த ஊருக்கு வந்து விளையாட்டுப் போல முப்பது வருடம் ஆகிவிட்டது’