தமிழ் விளையாடு யின் அர்த்தம்

விளையாடு

வினைச்சொல்விளையாட, விளையாடி

 • 1

  (குறிப்பிட்ட) விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுதல்; (குறிப்பிட்ட முறையில் விளையாட்டில்) ஆடுதல்.

  ‘இன்றைய போட்டியில் இந்திய வீரரை எதிர்த்து அமெரிக்க வீரர் விளையாடுகிறார்’
  ‘அதிக வேகத்தில் வீசப்பட்ட அந்தப் பந்தை டெண்டுல்கர் அற்புதமாக அடித்து விளையாடினார்’
  உரு வழக்கு ‘போலி மருந்துகளை விற்பவர்கள் மனித உயிருடன் விளையாடுகிறார்கள்’

 • 2

  குழந்தைகள், சிறுவர்கள் போன்றோர் ஓடுதல், பொம்மைகளுடன் நேரத்தைக் கழித்தல் போன்ற செயல்களிலும் அல்லது நாய், புலி, பூனை போன்ற விலங்குகள் ஓடுதல், புரளுதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுதல்.

  ‘பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்களைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்’
  ‘குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள்’
  ‘என் மகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் எதிர் வீட்டுக்கு விளையாட ஓடிவிடுவாள்’
  ‘புலிக் குட்டிகள் ஒன்றோடு ஒன்று விளையாடிக்கொண்டிருந்தன’

 • 3

  ஒன்றைச் செய்யும்போது அதில் உரிய கவனம் செலுத்தாமல் தேவை இல்லாத வேறு எதையாவது செய்துகொண்டிருத்தல்.

  ‘வேலை செய்யும்போது விளையாடாதே’

 • 4

  சண்டைக்கோ தகராறுக்கோ அழைக்கும் விதத்தில் நடந்துகொள்ளுதல்; சீண்டுதல்.

  ‘என்னிடமே விளையாடுகிறான், எச்சரித்துவை!’
  ‘அவனோடு விளையாடாதே, அவன் பொல்லாதவன்’