தமிழ் விளையாட்டு யின் அர்த்தம்

விளையாட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் வெற்றியை இலக்காகக் கொண்ட) பொழுதுபோக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட செயல்பாடு; ஆட்டம்.

  ‘கூடைப்பந்து விளையாட்டு’
  ‘விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம்’
  ‘சிறுவர்களுக்குச் சறுக்குமர விளையாட்டு மிகவும் பிடிக்கும்’
  ‘கணிப்பொறியில் நிறைய விளையாட்டுகள் உள்ளன’
  ‘விளையாட்டில் தோற்றதற்காகவா அழுகிறாய்?’
  உரு வழக்கு ‘இது விதியின் விளையாட்டு என்று சோகமாகச் சொன்னான்’

 • 2

  குழந்தைகள், சிறுவர்கள் போன்றோர் மகிழ்ச்சியுடன் ஈடுபடும் (ஓடுதல், பொம்மைகளுடன் நேரத்தைக் கழித்தல் போன்ற) செயல்கள்.

  ‘விளையாட்டு மும்முரத்தில் மதியம் சாப்பிட வேண்டும் என்பதையே மறந்துவிட்டான்’
  ‘உப்புமூட்டை தூக்கும் விளையாட்டு என்றால் என்னுடைய பெண் சட்டென்று அழுகையை நிறுத்திவிடுவாள்’

 • 3

  வேடிக்கையாகச் செய்யப்படுவது.

  ‘வேலையில் என்ன விளையாட்டு?’
  ‘வெறும் விளையாட்டு என்று நினைத்தது எப்படி ஆபத்தாக மாறிவிட்டது பார்’
  ‘குழந்தையை விளையாட்டாகக் கிள்ளினேன், அழ ஆரம்பித்துவிட்டது’

 • 4

  குறும்பு.

  ‘இந்த விளையாட்டையெல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே!’
  ‘கரும்பலகையில் குரங்கின் படம் வரைந்திருப்பதைப் பார்த்துத் தமிழ் ஆசிரியர் ‘இது யார் விளையாட்டு?’ என்று கேட்டார்’