தமிழ் விளைவி யின் அர்த்தம்

விளைவி

வினைச்சொல்விளைவிக்க, விளைவித்து

 • 1

  (நன்மை, துயரம், மாற்றம் முதலியவற்றை) ஏற்படுத்துதல்; உண்டாக்குதல்.

  ‘தொல்லை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை’
  ‘ஏழைகளுக்கு நன்மை விளைவிக்கும் திட்டங்கள்’

 • 2

  அருகிவரும் வழக்கு (பயிர் முதலியவற்றை) விளையச் செய்தல்.

  ‘எங்கள் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகள்’