தமிழ் விளைவு யின் அர்த்தம்

விளைவு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு செயலின் காரணமாக உண்டாகும் பலன்.

  ‘வேலையை விடுவதற்கு முன் அதன் விளைவுகளை யோசித்துப்பார்த்தாயா?’
  ‘மக்கள்தொகை பெருகிக்கொண்டே போனால் நாம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’
  ‘அவர் பதவி விலகுவதால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்’
  ‘உரிய நேரத்தில் சாப்பிடாததால் ஏற்பட்ட விளைவு இது’