தமிழ் விழா யின் அர்த்தம்

விழா

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றைச் சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில்) பெரிய ஏற்பாடுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.

  ‘நாட்டின் சுதந்திர தின விழா’
  ‘பாராட்டு விழா’
  ‘இசை விழா’
  ‘ஓய்வுபெற்றுச் செல்லும் தலைமையாசிரியருக்கு விழா எடுக்க மாணவர்கள் முடிவு செய்தனர்’
  ‘விளையாட்டுப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா’
  ‘காதணி விழா’
  ‘திரைப்படத்தின் நூறாவது நாள் விழா’
  ‘பொங்கல் விழா’
  ‘குழந்தையின் பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது’
  ‘சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா துவங்கியது’

 • 2

  காண்க: திருவிழா