தமிழ் விழிப்பு யின் அர்த்தம்

விழிப்பு

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  தூக்கம் நீங்கிய நிலை.

  ‘வழக்கத்திற்கு மாறாகச் சீக்கிரமே விழிப்புத் தட்டிவிட்டது’
  ‘தூக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாமல் எவ்வளவு நேரம்தான் படுக்கையில் புரண்டுகொண்டிருப்பது?’
  ‘மனிதன் உறங்கும்போது மனம் விழிப்பு நிலையில் இருப்பதில்லை’

 • 2

  மயக்கம் நீங்கிய நிலை; சுய உணர்வுடன் இருக்கும் நிலை.

  ‘சாலையில் மயங்கி விழுந்தவன் விழிப்பு வந்ததும் தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தான்’

 • 3

  எச்சரிக்கை உணர்வு.

  ‘விழிப்பாக இருந்தால் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம்’
  ‘காவல்துறையினர் விழிப்பாகச் செயல்பட்ட காரணத்தால் எந்தக் கலவரமும் இல்லாமல் ஊர்வலம் முடிவடைந்தது’

 • 4

  விழிப்புணர்ச்சி.

  ‘மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். இனி அவர்களை ஏமாற்ற முடியாது’
  ‘திரைப்படத்தின் மூலம் அரசியல் விழிப்பை ஏற்படுத்த முடியாது’
  ‘மக்களிடையே விழிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாரதியார் எழுதிய தேசியப் பாடல்கள்’
  ‘கல்வி மாணவர்களிடையே அறிவியல் விழிப்பை ஏற்படுத்த வேண்டும்’