தமிழ் விழுங்கு யின் அர்த்தம்

விழுங்கு

வினைச்சொல்விழுங்க, விழுங்கி

 • 1

  (உணவுப் பொருள், மருந்து முதலியவற்றை) வாயின் வழியாகச் செல்லவிடுதல்.

  ‘உணவை நன்றாக மென்ற பிறகே விழுங்க வேண்டும்’
  ‘காசைக் குழந்தையிடம் கொடுக்காதே. விழுங்கிவிடப்போகிறது’
  ‘என்னை அப்படியே விழுங்கிவிடுவதுபோல் ஒரு பார்வை பார்த்தான்’
  உரு வழக்கு ‘ஒரு முறை புயல் வீசியபொழுது கடல் பொங்கி அந்தப் பாலத்தை விழுங்கிவிட்டது’
  உரு வழக்கு ‘அந்தப் பெரிய நிறுவனம் பல சிறு நிறுவனங்களை விழுங்கிவிட்டது’

 • 2

  (வார்த்தைகளை) தெளிவாகவோ முழுமையாகவோ கேட்க முடியாதபடி வெளிப்படுத்துதல்.

  ‘வந்த விஷயத்தைச் சொல். வார்த்தையை விழுங்காதே!’
  ‘வார்த்தைகளை விழுங்காமல் பாடு’