விழுது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விழுது1விழுது2விழுது3

விழுது1

பெயர்ச்சொல்

 • 1

  (ஆலமரம் போன்ற மரங்களின்) கிளைகளிலிருந்து வளர்ந்து கீழ்நோக்கித் தொங்குவதும் பூமியில் புதைந்து புதிய மரமாக முளைக்கக் கூடியதுமான தடித்த வேர்.

விழுது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விழுது1விழுது2விழுது3

விழுது2

பெயர்ச்சொல்

 • 1

  (நீர் சேர்த்து அரைத்துப் பெறும்போது) மாவுபோல இருப்பது.

  ‘பச்சிலையை விழுதாக அரைத்துக்கொண்டு நெற்றியில் பூசு’
  ‘பச்சைமிளகாய், ஓமம், சீரகம், தேங்காய் ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும்’

 • 2

  (நெய்யைக் குறித்து வரும்போது) கெட்டியாகக் குழைத்த மாவுபோல இருப்பது.

  ‘நெய் விழுதாக இருக்கிறது’

விழுது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

விழுது1விழுது2விழுது3

விழுது3

பெயர்ச்சொல்

 • 1

  (தறியில்) புணித் திறப்பு நிலையில் பாவு வருவதற்கான, வலையின் கண் வடிவில் முறுக்கப்பட்ட கம்பி அல்லது நூல்.