தமிழ் விழுந்துவிழுந்து யின் அர்த்தம்

விழுந்துவிழுந்து

வினையடை

 • 1

  அளவுக்கு அதிகமாக.

  ‘அவள் விழுந்துவிழுந்து சிரிக்கும்படி நீ என்ன சொன்னாய்?’
  ‘கல்யாணத்தில் விருந்தினர்களை விழுந்துவிழுந்து உபசரித்தார்கள்’

 • 2

  (ஒன்றைச் செய்வதில்) மிகுந்த முனைப்புடன்.

  ‘என்ன புத்தகத்தை அப்படி விழுந்துவிழுந்து படித்துக்கொண்டிருக்கிறாய்?’
  ‘காலையிலிருந்து எதை அப்படி விழுந்துவிழுந்து தேடிக் கொண்டிருக்கிறாய்?’