தமிழ் விழுந்து பிடுங்கு யின் அர்த்தம்

விழுந்து பிடுங்கு

வினைச்சொல்பிடுங்க, பிடுங்கி

  • 1

    (எதிரே இருப்பவர் மேற்கொண்டு பேச்சைத் தொடர முடியாதபடி) நிதானம் இழந்து எரிச்சலோடு பேசுதல்.

    ‘நான் அப்பாவிடம் போய்ப் பணம் கேட்க மாட்டேன். அவர் இருக்கும் மனநிலையில் விழுந்து பிடுங்கிவிடுவார்’
    ‘உனக்கு என்ன ஆயிற்று? எல்லோரையும் விழுந்து பிடுங்கிக்கொண்டிருக்கிறாயே?’
    ‘கேள்வி கேட்கும் மாணவர்களையெல்லாம் விழுந்து பிடுங்கினால் பிறகு யார் ஆசிரியரிடம் சந்தேகம் கேட்பார்கள்?’