தமிழ் விவகாரம் யின் அர்த்தம்

விவகாரம்

பெயர்ச்சொல்

 • 1

  நடைமுறை அலுவல்; நடப்பு.

  ‘வீட்டில் பண விவகாரங்களை என் மனைவிதான் கவனித்துக்கொள்கிறாள்’
  ‘கட்சியின் மாநில விவகாரங்களை மேற்பார்வையிடத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன’
  ‘உலக விவகாரத்தைத் தெரிந்துகொள்வதில் தாத்தாவுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு’

 • 2

  தகராறு.

  ‘விவகாரம் என்று வந்தால் அடிதடியில் இறங்கவும் மாமா தயங்க மாட்டார்’
  ‘நீ தேவையில்லாமல் காலையில் விவகாரம் பண்ணாதே’

 • 3

  பிரச்சினை.

  ‘பையன் போக்கே சரியில்லை. காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டுவிட்டானா?’
  ‘வீண் விவகாரத்தைக் கிளப்பாமல் உன் வேலையைப்பார்’
  ‘இது கவனத்துடன் கையாளப்பட வேண்டிய விவகாரம்’
  ‘உன் குடும்ப விவகாரத்தில் நான் தலையிடமாட்டேன்’