தமிழ் விவரி யின் அர்த்தம்

விவரி

வினைச்சொல்விவரிக்க, விவரித்து

 • 1

  ஒன்றைத் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் அதைப் பற்றிய விரிவான தகவல்களைத் தருதல்.

  ‘தான் வீடு தேடி அலைந்ததைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தான்’
  ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புத அழகு!’
  ‘இருதயத்தின் படம் வரைந்து பாகங்களை விவரிக்கவும்’
  ‘கதையைப் பற்றி முழுவதுமாக விவரித்தால் சுவாரசியம் போய்விடும்’
  ‘இசை அனுபவத்தை எவ்வளவுதான் விவரித்தாலும் அது நேரில் கேட்பதற்கு ஈடாகாது’
  ‘சம்பவம் நடந்த தினத்தில் என்ன நடந்தது என்று விவரிக்க முடியுமா?’