தமிழ் விவஸ்தை யின் அர்த்தம்

விவஸ்தை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு இணைந்து அல்லது எதிர்மறைத் தொனியில்) வயது, தகுதி, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளும் அறிவும் பக்குவமும்.

    ‘யாரிடம் என்ன பேசுவது என்று ஒரு விவஸ்தையே கிடையாதா உனக்கு?’
    ‘கடன் தர மறுத்தவரிடம் விவஸ்தை கெட்டுப்போய் மீண்டும் கடன் கேட்க வேண்டுமா?’