தமிழ் விவாதம் யின் அர்த்தம்

விவாதம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைக் குறித்துக் குறிப்பிட்ட நிலையை மேற்கொண்டு) கருத்துகளைத் தெரிவித்து நிகழ்த்தும் உரையாடல் அல்லது அப்படிப் பலரும் பேசிக்கொள்ளும் நிலை.

  ‘புதிய கல்விக் கொள்கையைப் பற்றி நாடெங்கும் விவாதங்கள் நடந்தன’
  ‘தொலைக்காட்சி, வானொலி குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது’
  ‘இந்த விவாதம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது’
  ‘பல்வேறு தரப்பின் விவாதங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்’
  ‘பூமியைத் தவிர்த்து வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உண்டா என்பதுபற்றி ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன’
  ‘சூடான விவாதம்’
  ‘விவாதம் அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர உணர்ச்சிபூர்வமானதாக இருக்கக் கூடாது’