தமிழ் விவாதி யின் அர்த்தம்

விவாதி

வினைச்சொல்விவாதிக்க, விவாதித்து

 • 1

  கருத்துகளை வெளிப்படுத்தி உரையாடல் நிகழ்த்துதல்; விவாதம்செய்தல்.

  ‘தீவிரவாதிகள் பிரச்சினைகுறித்து அமைச்சரவை கூடி விவாதித்தது’
  ‘எதிர்காலத் திட்டங்களைப் பற்றி வெகு நேரம் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்’
  ‘மாநாட்டில் மதிப்புக் கூட்டு வரிபற்றி விவாதிக்கப்பட்டது’
  ‘தொழிற்சங்கக் கூட்டத்தில் பல முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, அவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன’
  ‘பல மணி நேரம் விவாதித்தும் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை’
  ‘இலக்கியங்களைப் படித்துவிட்டு விமர்சிப்பதும் விவாதிப்பதும் நல்லது’