தமிழ் விஷம் யின் அர்த்தம்
விஷம்
பெயர்ச்சொல்
- 1
உட்கொள்வதன்மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன்மூலம் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்த பொருள்; நஞ்சு.
‘விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டான்’‘பாம்பின் விஷம் இன்று பல மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது’ - 2
(பெயரடையாக வரும்போது) மேற்குறிப்பிடப்பட்ட தன்மையை உடையது.
‘தொழிற்சாலையிலிருந்து விஷ வாயு கசிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்’‘விஷக் கிருமி’‘விஷ ஜந்து’