தமிழ் விஷமம் யின் அர்த்தம்

விஷமம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தொந்தரவு ஏற்படுத்தக் கூடிய செயல்; குறும்புச் செயல்.

  ‘குழந்தைகளின் விஷமத்தைப் பொருட்படுத்தலாமா?’
  ‘அவன் பார்வையிலேயே விஷமம் வெளிப்பட்டது’
  ‘அந்த அதிகாரி என்னை விஷமமாகப் பார்த்தார்’
  ‘விஷமமான பார்வை’

 • 2

  கெடுதல் செய்யும் நோக்கம்.

  ‘அவன் பேச்சில் விஷமம் இருந்தது’