தமிழ் விஷம்வை யின் அர்த்தம்

விஷம்வை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (கொல்லும் நோக்கத்தோடு) உணவில் விஷத்தைக் கலந்து உண்ணச் செய்தல்.

    ‘எனக்கு வரும் கோபத்திற்கு அவனை விஷம்வைத்துக் கொன்றுவிடலாம் போல் இருக்கிறது’
    ‘பெற்ற தாயே தன் பிள்ளைக்கு விஷம்வைப்பாளா?’