தமிழ் விஷயம் யின் அர்த்தம்

விஷயம்

பெயர்ச்சொல்

 • 1

  தகவல், செய்தி, விவரம் போன்றவற்றைக் குறிப்பிடும் பொதுச் சொல்.

  ‘யார் உனக்கு இந்த விஷயத்தைச் சொன்னது?’
  ‘விஞ்ஞான விஷயங்களைப் பற்றி நிபுணரிடம்தான் கேட்க வேண்டும்’
  ‘வளவளவென்று பேசாதே. விஷயத்துக்கு வா’
  ‘என்ன விஷயமாக வந்தீர்கள்?’
  ‘இந்த விஷயத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’
  ‘இது உணர்வுபூர்வமான விஷயம்’
  ‘இந்த அரசியல் விஷயமெல்லாம் எனக்கு வேண்டாம்’
  ‘சினிமா விஷயம் மட்டும் சுவாரசியமாகப் பேசுவான்’
  ‘அவர் என்ன விஷயமாக உன்னைப் பார்க்க வந்தார்?’
  ‘சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக்கொண்டு அப்பாவிடம் பேசாமல் இருப்பதா?’
  ‘உன் அண்ணனுக்கு வேலை கிடைத்த விஷயத்தை என்னிடம் சொல்லவில்லையே?’
  ‘இந்த விஷயத்தை நாம் சற்று ஜாக்கிரதையாகப் பார்க்க வேண்டும்’

 • 2

  (ஒன்றைக் குறித்த) விவகாரம்.

  ‘என் வேலை விஷயமாக அப்பா மதுரைக் குச் சென்றிருக்கிறார்’
  ‘வியாபார விஷயமாக உங்களிடம் பேச வேண்டும்’
  ‘வீட்டு விஷயங்களில் நான் தலையிடுவதில்லை’
  ‘கல்யாண விஷயத்தை அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்’
  ‘வீடு வாங்கும் விஷயம் என்னவாயிற்று?’

 • 3

  திறமை; சரக்கு.

  ‘அவனிடம் கொஞ்சம் விஷயம் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்’