தமிழ் விஸ்தாரம் யின் அர்த்தம்

விஸ்தாரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (இடத்தைக் குறித்து வரும்போது) விரிந்த பரப்பு; விசாலம்.

  ‘கல்யாண மண்டபம் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக இருந்தால் நன்றாக இருக்கும்’
  ‘தொழிற்சாலை நிறுவ இன்னும் விஸ்தாரமான இடம் வேண்டும்’

 • 2

  அருகிவரும் வழக்கு (பேச்சு, எழுத்து குறித்து வரும்போது) விரிவு; விளக்கமான விவரிப்பு.

  ‘ஊருக்குப் போய்விட்டு வந்ததைப் பற்றி மாமா விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்’