தமிழ் வீழ்ச்சி யின் அர்த்தம்

வீழ்ச்சி

பெயர்ச்சொல்

 • 1

  (உற்பத்தி, விலை, பங்குச் சந்தை முதலியவற்றில் ஏற்படும்) சரிவு.

  ‘கரும்பு உற்பத்தி வீழ்ச்சி’
  ‘அமோக உற்பத்தியினால் தானிய விலை வீழ்ச்சி அடைந்தது’
  ‘பசும்தேயிலை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குத் தீர்வு காணக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்’
  ‘பொருளாதாரக் காரணங்களால் மட்டுமன்றி அரசியல் காரணங்களாலும் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது’

 • 2

  (ஆட்சி) அகற்றப்பட்ட நிலை.

  ‘ராணுவ ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின் ஜனநாயகம் புது வேகம் பெற்றது’
  ‘அசோகருக்குப் பின் மௌரிய பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது’

 • 3

  (ஒன்று அல்லது ஒருவர்) சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்; அழிவு.

  ‘திரைப்படங்களின் வருகை ஒருவகையில் நாடகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டது’
  ‘அரசியலில் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து அவர் மீளவேயில்லை’
  ‘வேளாண்மையில் ஏற்பட்ட வீழ்ச்சியை நாம் சரிசெய்ய வேண்டும்’