வெகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வெகு1வெகு2

வெகு1

பெயரடை

 • 1

  மிகவும்.

  ‘காய்கறி விலை வெகு மலிவு’
  ‘கதையின் ஆரம்பமே வெகு ஜோர்’

வெகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வெகு1வெகு2

வெகு2

இடைச்சொல்

 • 1

  (குறிப்பிடப்படும்) தன்மையின் மிகுதியைக் காட்ட அல்லது தன்மையை வலியுறுத்திக் கூறப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘குதிரை வெகு வேகமாக ஓடத் தொடங்கியது’
  ‘வெகு விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும்’
  ‘வைரஸ் கிருமிகள் வெகு வேகமாக நோயைப் பரப்பும்’
  ‘மண்புழு உரம் தயாரிப்பதைப் பற்றி நூலில் வெகு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது’
  ‘வெகு சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று கனவு காணாதே’

 • 2

  ‘(தூரத்தில், காலத்தில்) நீண்ட’ என்ற பொருளில் பயன் படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘இந்த ஊருக்குத் தண்ணீர் வெகு தொலைவிலிருந்து கொண்டுவரப்படுகிறது’
  ‘வெகு தூரத்திலிருந்து பார்த்தாலே கோபுர உச்சியில் எரியும் விளக்கு தெரியும்’
  ‘வெகு நேரமாய் உனக்காகக் காத்திருக்கிறேன்’
  ‘நாங்கள் வெகு நாட்களாக நண்பர்கள்’