தமிழ் வெகுஜனம் யின் அர்த்தம்

வெகுஜனம்

பெயர்ச்சொல்

 • 1

  பெரும்பாலான மக்கள்; பொதுமக்கள்.

  ‘பல வெகுஜன அமைப்புகள் வெள்ள நிவாரண நிதி அளித்தன’
  ‘வெகுஜன ஆதரவு இருந்தால் மட்டுமே இந்தத் திட்டம் நிறைவேறும்’
  ‘தொலைக்காட்சி ஒரு வெகுஜனத் தொடர்புச் சாதனம் ஆகும்’
  ‘வெகு ஜன இயக்கம்’
  ‘வெகுஜனச் செல்வாக்கு’
  ‘வெகுஜன விரோதப் போக்கு பயனளிக்காது என்பதை எல்லாக் கட்சிகளும் புரிந்துகொண்டுள்ளன’
  ‘வெகுஜனக் கருத்து’
  ‘வெகுஜனப் போராட்டம்’
  ‘வெகுஜனப் பத்திரிகைகள்தான் நிறைய விற்பனையாகின்றன’
  ‘வெகுஜன ரசனைக்குத் தீனிபோடும் திரைப்படங்கள்’